WWF இந்தியா தனது பாதுகாக்கும் செயல்பாடுகள் காரணமாக பாதிக்கப்படும் சமூகங்கள்[1]எழுப்பும் கவலைகளைப் பெறுவதற்கும் பதிலளிப்பதற்கும் ஒரு இயங்கமைவை நிறுவியுள்ளது. இது WWFஇன் சமூகக் கொள்கைள், கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் (கீழே பார்க்க) நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தவும், எங்கள் பாதுகாக்கும் செயல்முறைகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. WWF இந்தியாவின் நெறிமுறை உறுதிப்பாடுகளான நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையின் முக்கியப் பகுதியாகவும் இந்த இயங்கமைவு உள்ளது . குறை தீர்வு செயல்முறை உரையாடல், ஓத்துழைப்பு, இருதரப்பு உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறைகள்/புகார்களை சரியான நேரத்தில் திறம்படக் கையாளுவது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், இருதரப்பு புரிந்துகொள்ளல்களை மேம்படுத்தவும், பொறுப்புடைமையை வலுப்படுத்தவும் உதவுவதுடன் கூட்டுழைப்பிற்கான அடித்தளத்தையும் வழங்குகிறது.

யாரால் புகார் செய்ய முடியும் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு என்றால் யார்?

WWF இந்தியாவின் எந்தவொரு திட்ட செயல்பாட்டின் வடிவமைப்பிலோ நடைமுறைப்படுத்தலிலோ WWF இந்தியா பின்பற்ற வேண்டிய அதன் சமூகக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்புகளை WWF இந்தியா பின்பற்றத் தவறுவதன் காரணமாக எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டோம் எனக் கருதும் சமூகக் குழுக்கள் (குறைந்தபட்சம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்) அல்லது சமூக நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட தரப்பு”என கருதப்படுகிறது.

எந்தவொரு பாதிக்கப்பட்ட தரப்பும் குறை/புகாரைப் பதிவு செய்யலாம். WWF இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்ட குறை/புகார் தொடர்பில் தங்களின் சார்பாகப் பேசுவதற்குஎந்தவொரு நபரையோ அல்லது நிறுவனத்தையோ (பிரதிநிதிகள்) பாதிக்கப்பட்ட தரப்பு கோர முடியும்.

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக குறை/புகாரைப் பதிவுசெய்யும் பிரதிநிதிகள்அவர்களின் சார்பாக செயல்படும் அதிகாரத்திற்கான உறுதியான சான்றினை வழங்க வேண்டும்.

பிரதிநிதிக்கான சில எடுத்துக்காட்டுகள்: கிராமத் தலைவர் போன்ற சமூகத்தின் ஓர் அதிகாரமிக்க நபர்; பரம்பரிய அல்லது பழக்கவழக்கம் சார்ந்த அதிகாரம் பெற்றோர்; பாதிக்கப்பட்ட தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது என்று உறுதியான சான்றினைக் காட்டும் உள்ளூர், தேசிய அல்லது பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள்  (NGO).

உறுதியான சான்றுஎன்பது கிராம சபைத் தீர்மானமாக அல்லது குறைந்தபட்சம் 10 கிராம மக்களால் இணைந்து கையொப்பமிடப்பட்ட பஞ்சாயத்துத் தலைவரின் கடிதமாக இருக்கலாம்.  

குறை / புகாரிற்கான வரைகூறுகள்

குறை / புகார் என்பது WWF இந்தியாவின் தவறுகளால் அல்லது அதன் நடைமுறைப்படுத்தல் கூட்டாளரின் தவறுகளால் WWF வலைப்பின்னல் சமூகக் கொள்கைள், கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களில் உள்ளூர் (பழங்குடியினர்) உரிமைகள், மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம், நல்வாழ்வு ஆகியன தொடர்பாக ஏற்படும் ஏதேனும் எதிர்மறை பாதிப்புகள் ஆகும்.

குறை / புகாரினை ஆங்கிலம், இந்தி, அல்லது எந்தவொரு உள்ளூர் மொழியிலும் பதிவு செய்யலாம்.

பெயர் குறிப்பிடா குறைகள் /புகார்கள் கருத்தில் கொள்ளப்படாது ஆனால் புகார்தாரர்கள் இரகசியக் காப்பினைக் கோரலாம்.

குறை / புகாரைச் சமர்பிப்பதற்கான வடிவம்

குறை/ புகார் பின்வரும் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:  

  • புகார்தாரரின் பெயரும்  தொடர்புத் தகவலும் (புகார்தாரர் நேரடியாகப் புகார் செய்யவில்லையெனில், பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் புகார் செய்ய அதிகாரம் கொண்டுள்ளனர் என்பதற்கான சான்று)
  • கவலைக்குரிய நிகழ்வு அல்லது திட்டம் மற்றும் குறை / புகாரின் குறிப்பிட்ட இடம்
  • குறிப்பிட்ட குறை / புகாரின் விவரங்களும் நடந்த தேதியும்
  • எதிர்கொண்ட எதிர்மறை பாதிப்பு(கள்)
  • வேறு ஏதேனும் தொடர்புடைய தகவல்கள் அல்லது ஆவணங்கள்
  • WWF இந்தியா / அதன் நடைமுறைப்படுத்தல் கூட்டாளர்களைத் தொடர்பு கொண்டது உள்ளிட்ட பிரச்சினையை எழுப்பு / தீர்க்க புகார்தாரரால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சிகளும்
  • இரகசியக் காப்பு கோரப்படுகிறதா என்ற விவரம் (காரணங்களைக் குறிப்பிட்டு)

புகாரைப் பெறும் முறை

WWF இந்தியாவிற்கான குறைகள்/புகார்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்: grievances@wwfindia.netஅல்லது குறைதீர்வு, C/O HR, WWF இந்தியா, 172 B லோடி சாலை புது தில்லி 110003என்ற முகவரிக்கு கடிதம் வாயிலாக அனுப்பலாம்

 

[1]சமூகங்கள் என்பது WWF இந்தியாவின் நிலப்பரப்புகளில் வசிக்கும் மற்றும் WWF இந்தியா இணைந்து பணியாற்றும் பழங்குடியினர் அல்லது பிற உள்ளூர் சமூகங்கள் அல்லது அதன் உறுப்பினர்களைக் குறிக்கும்

Donate to WWF

Your support will help us build a future where humans live in harmony with nature.